search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை கைது"

    • என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
    • நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், புவனகிரியை சேர்ந்தவர் நிஹாரிகா (வயது 29). இவருடைய 16-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.

    அவருடைய தாயார் மறுமணம் செய்து கொண்டார். தந்தை இழப்பு, தாய் மறுமணம் என மனம் உடைந்த நிஹாரிகா படிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

    பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரையும், பின்னர் அரியானாவை சேர்ந்த மற்றொருவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.

    நிஹாரிகவின் மோசடி குறித்து 2-வது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிஹாரிகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த சக பெண் கைதியுடன் நிஹாரிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்தபோது ஜெயிலில் பழக்கமான கைதியின் மகன் ராணா என்பவருடன் நிஹாரிகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் பெங்களூரு சென்றபோது அங்குள்ள கால்நடை டாக்டர் நிகில் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆன்லைன் திருமண விளம்பரம் மூலம் ஐதராபாத் துகாரகேட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் குமாருடன் நிஹாரிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

    நிஹாரிகா தான் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்வதாக அவரிடம் தெரிவித்தார்.

    ரமேஷ் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி மகளை தவிக்கவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு ரமேஷ் குமார் நிஹாரிகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் காட்கேசர் ,போச்சவரத்தில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். ரமேஷ் குமார் நிஹாரிகாவுக்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வழங்கினார். கேட்ட போதெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தார். இதனால் நிஹாரிகா ஆடம்பரமான வாழ்க்கை வாழ தொடங்கினார்.

    நிஹாரிகா அடிக்கடி பெங்களூர் சென்று கள்ளக்காதலர்களை சந்தித்து வந்தார். ரமேஷ் குமாருக்கு அவர் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நிஹாரிகா ரமேஷ் குமாரிடம் ரூ.8 கோடி கேட்டார். மிகப்பெரிய தொகையாக இருப்பதாக நினைத்த ரமேஷ் குமார் பணம் தர மறுத்தார். இது நிஹாரிகாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவருடைய கள்ளக்காதலன் ராணாவை வரவழைத்தார். சம்பவத்தன்று இரவு ரமேஷ் குமார் வீட்டில் மது குடித்துவிட்டு மயங்கியபடி கிடந்தார்.

    அந்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமேஷ் குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள கள்ளக்காதலன் நிகில் ரெட்டிக்கு நிஹாரிகா தகவல் தெரிவித்தார்.

    பின்னர் ரமேஷ் குமார் பிணத்தை காரில் ஏற்றிக்கொண்டு 800 கிலோமீட்டர் பயணம் செய்தனர். கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சுண்டிகுப்பாவில் உள்ள காபி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு ரமேஷ் குமார் உடலை துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பாதி எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பிணத்துடன் சென்ற கார் பதிவு எண் பதிவாகி இருந்தது. அதன் மூலம் நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.

    ரமேஷ் குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் நிஹாரிகா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து குடகு போலீசார் கூறுகையில், " உடல் பாகங்கள் போர்வையால் சுற்றி எரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள 500 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் நள்ளிவு 12 மணிக்கு காப்பி தோட்டத்திற்குள் சென்ற கார் பதிவு எண் தெளிவாகத் தெரிந்தது. அதன்மூலம் விசாரணையை தொடங்கினோம்.

    அப்போது கார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருடையது என தெரியவந்தது. மேலும் அவரைக் காணவில்லை என அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    சந்தேகம் ஏற்பட்டதால் நிஹாரிகாவிடம் விசாரித்தோம். இதில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது" என்றனர்.

    • பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார்.
    • கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீதா(வயது46). முருகேசன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். கீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கீதாவுக்கும் முசிறியை அடுத்த வாழவந்தியை சேர்ந்த பாலசந்திரன்(64) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பாலச்சந்திரன் அடிக்கடி கீதாவை சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை பாலச்சந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டுக்கு வந்தார். அங்கு கீதாமட்டும் தனியாக இருந்தார். அப்போது கீதாவுக்கும், பாலசந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து ஆவேசமாக பாலச்சந்திரன் வாழ்வந்திக்கு சென்றார்.

    அங்கு தனது வீட்டு அருகே வசித்த ரமேஷ்(55) என்பவர் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவர் வாழவந்தி தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். திடீரென ரமேசையும் பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டினார்.

    தலை மற்றும் கைகால்காளில் வெட்டுக்காயம் அடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிக் கண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்த கொலைகளால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கொலையாளி பலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தார்.

    இதை தொடர்ந்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்துக்கும் ரமேஷ் கொலைக்கும் வேறு வேறு காரணங்கள் இருப்பதாக போலீசாரிடம் பாலச்சந்திரன் கூறியுள்ளார். எனினும் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் கொலை செய்யப்பட்ட ரமேசுக்கும் பாலசந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக அவரை பாலசந்திரன் கொலை செய்ததாக தெரிகிறது. கள்ளக்காதலி கீதாவை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முசிறி பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
    • குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை, மாசிலா மணி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.

    இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் சரத்குமார் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தேவராஜிக்கும், சரத்குமாருக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் தேவராஜ் தன் மகன் சரத்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை தேவராஜ் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த தேவராஜியின் மனைவி மற்றும் மகள் அலறியடித்துக்கொண்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று தேவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.

    குடிபோதையில் தந்தையை மகனே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    கடலூர்:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முகிலன். பிரபல ரவுடி. இவர் நேற்று இரவு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள விவசாய கரும்பு தோட்டத்தில் கும்பலுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் முகிலனை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 3 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை ரவுடி முகிலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    ரவுடியை கொலை செய்த கும்பல் புதுவை மாநிலத்தை கலக்கும் மற்றொரு பிரபல ரவுடியான முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 31), அரியாங்குப்பம் விஸ்வா (23), ரெட்டியார்பாளையம் கணபதி (27), புவனேஸ்வர் (20), உழவர்கரையை சேர்ந்த ஸ்ரீராக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ரவுடி விக்கிக்கும் கொலை செய்யப்பட்ட முகிலனுக்கும் புதுவை மாநிலத்தில் யார் பெரிய ரவுடி என்ற முன்விரோத தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் ரவுடி விக்கி என்ற விக்னேஸ்வரனை, முகிலன் திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

    ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலன் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியேவந்தார். சிறையில் இருக்கும் போது நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த புகழ் என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன் புதுவையில் இருந்தால் ரவுடி விக்கி கொலை செய்து விடுவான் என்ற நோக்கத்தில் சிறையில் பழக்கமான கைதி புகழின் பகுதியான சித்தரசூர் பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தரப்பை சேர்ந்தவர்கள் முகிலனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முகிலன் நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் பகுதியில் பதுங்கியிருப்பது விக்கி தரப்பிற்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து முகிலன் எங்கு செல்கிறான் என்பதை விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் நோட்டமிட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு கும்பலுடன் முகிலன் சித்தரசூர் பகுதியை அடுத்த விவசாய கரும்பு தோட்டத்தில் மது குடித்து கொண்டிங்கும் தகவல் விக்கி தரப்பிற்கு தெரிவந்தது. உடனே விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் வீச்சரிவாளுடன் அங்கு சென்று முகிலனை ஓட ஓடவிரட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    முகிலன் கொலை செய்யப்பட்டபோது அவருடன் இருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது அண்ணன் விஜயன்.

    இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 4 1/2 ஏக்கர் நிலம், 9 தறி பட்டறைகள் உள்ளது.

    விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கோபால், விஜயன் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 30-6-2017 அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் இரும்பு ராடால் தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கோபால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குணசேகரன், அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7000 அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதில் 6-வது குற்றவாளியான குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

    • பெட்ரோல் போடுவதற்கு பணம் தருமாறு ஷைனிடம் ஷெரின் கேட்டுள்ளார்.
    • குடிபோதையில் ஹெல்மெட்டால் அடித்து தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கஞ்சாணி நாலாம்கல்லு பகுதியை சேர்ந்தவர் ஷைன்(வயது28). திருச்சியில் பெயிண்டராக வேலைபார்த்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் வந்திருக்கிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது அண்ணன் ஷெரின் மற்றும் அண்ணனின் நண்பர் அருண் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். மோட்டார் சைக்கிளை அருண் ஓட்டிச்செல்ல, ஷைன் மற்றும் ஷெரின் ஆகிய இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக கூறி திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் ஷைனை சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஷைன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    அதில் ஷைன் தவறி கீழே விழுந்ததில் இறக்க வில்லை என்பதும், அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டதில் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஷைனின் அண்ணன் ஷெரின் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஷைன் கொல்லப்பட்டதை இருவரும் ஒப்புக் கொண்டனர். சம்பவத்தன்று 3பேரும் மது குடிக்க சென்றுள்ளனர். மது குடித்துவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளில பெட்ரோல் காலியாகி விட்டது. இதனால் பெட்ரோல் போடுவதற்கு பணம் தருமாறு ஷைனிடம் ஷெரின் கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஷெரின், தன்னிடம் இருந்த ஹெல்மெட்டால் ஷைனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    குடி போதையில் இருந்த ஷைன் மயங்கி விழுந்து விட்டார். இதையடுது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறிவிழுந்து விட்டதாக கூறி ஷைனை ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில் இறந்துவிட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷெரின் மற்றும் அருணை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ஹெல்மெட்டால் அடித்து தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலா (36).

    விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கலா கணவர் விஜயகுமாரை வீட்டில் இருந்த இரும்பு சுத்தியலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரின் தலையில் இரும்பு சுத்தியலால் தாக்கி கொலை செய்த மனைவி கலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் பெண்கள் சிறையில் கலாவை அடைத்தனர்.

    கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாபுஜி மீது நொளம்பூர் போலீசில் வெங்கட்ராமன் புகார் அளித்தார்.
    • வீட்டின் மாடியில் வைத்து சரமாரியாக அடித்து பாபுஜியை அவர்கள் கொலை செய்தனர்.

    போரூர்:

    சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் என்கிற சோட்டா வெங்கட். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மயிலாடுதுறையை சேர்ந்த பாபுஜி என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    பாபுஜி வசூல் செய்த பணத்தை கையாடல் செய்ததாகவும், மேலும் 2 ½ பவுன் நகைகளை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாபுஜி மீது நொளம்பூர் போலீசில் வெங்கட்ராமன் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி இரவு கோயம்பேட்டில் நின்ற பாபுஜியை வெங்கட்ராமன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார்.

    பின்னர் வீட்டின் மாடியில் வைத்து சரமாரியாக அடித்து பாபுஜியை அவர்கள் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை மாங்காடு அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியில் வைத்து எரித்துவிட்டனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் கொலை உள்ளிட்ட 7பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே பைனான்சியர் வெங்கட்ராமன், அவரது கூட்டாளிகளான மதுரவாயலை சேர்ந்த சரவணன், திலீப், துணை நடிகரான புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் கோபி, வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கோபி கிஷோத், கார்த்திகேயன், சாரதி ஆகிய 8பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பாபுஜியை கடத்தி நிர்வாணபடுத்தி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியபோது வெங்கட்ராமன் வீட்டிற்கு பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு அமல்ராஜ் வந்து சென்றது தெரியவந்தது.

    மேலும் சம்பவம் நடந்த வீட்டில் மது அருந்திய அமல்ராஜ் சுமார் 1மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்து தாக்குதல் சம்பவங்களை நேரில் பார்த்துள்ளார்.

    அதன்பின்னர் தான் பாபுஜி எரித்து கொலை செய்யப்பட்டார்.

    போலீஸ்காரர் ஒருவர் கடத்தல் சம்பவத்தை நேரில் பார்த்தும் தன் கண் முன்னால் நடந்த ஒரு குற்ற சம்பவத்தை பற்றி உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவிக்காமல் மறைத்து உள்ளார்.

    இதையடுத்து இந்த கொலை வழக்கில் 9-வது குற்றவாளியாக போலீஸ்காரர் அமல்ராஜ் சேர்க்கப்பட்டார். அவரை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    • ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உறவினர் ஒருவருக்கும் குருதேவ் பக்குக்கும் வீடு கட்டுவது சம்பந்தமான நிலப்பிரச்சினை இருந்து வந்ததும் இதன் காரணமாக அவர் 4 பேரையும் கடப்பாரையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.
    • சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது70). இவர் தனது மனைவி ஊரான குலசேகரப்பட்டினம் சவேரியார்கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நடராஜனும், அவரது மனைவியும் மட்டும் குலசேகரன்பட்டினத்தில் வசித்து வந்தனர். அவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு நடராஜனும், அவரது மனைவியின் உறவினரான முத்தையா என்பவரது மகன் சின்னத்துரையும் (27) குலசேகரப்பட்டினம் புறவழிச்சாலையில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.

    உடனே அவர்கள் நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தை மர்மநபர் அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
    • போலீசார் விரைந்து சென்று கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    திருச்செந்தூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ராஜ் கண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தை மர்மநபர் அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை நடத்தினார்.

    ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வினோத் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கந்தசாமி (22) என்பவர் வினோத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கந்தசாமியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் வீரபாண்டியபட்டணம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி அளித்த வாக்குமூலத்தில், இறந்து போன வினோத் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு செய்வான். அதை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக கூறினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
    • கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பக்கமுள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (24). ரவுடி ஆவார். கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜாமீனில் திலக் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் விதமான தான் மத்திகிரியை சேர்ந்த சசிகுமார்(24) என்பவர் மூலம் மேற்கண்ட கொலையை செய்ததாக கூறியிருந்தார்.

    தொடர் விசாரணையில், திலக், டீ கடையில் இருந்த தகவலை, சசிகுமாருக்கு இவர்தான் தெரியபடுத்தினார் என்றும், திலக்கை கொல்ல சசிகுமாருக்கு திம்மராயப்பா பணம் கொடுத்ததும், தெரியவந்தது.

    இதையடுத்து, திம்மராயப்பா, மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி மகன் சிவகுமார்(24) மற்றும் தின்னூரை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான சசிகுமார், நேற்று சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×